ஸ்ரீ ராமரின் படத்தை பார்க்க நேரில் வந்த ஹனுமான்!! இதற்குத்தான் ஷீட் ஒதுக்கப்பட்டதா?

ஸ்ரீ ராமரின் படத்தை பார்க்க நேரில் வந்த ஹனுமான்!! இதற்குத்தான் ஷீட் ஒதுக்கப்பட்டதா?
  • PublishedJune 16, 2023

இந்திய சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டிற்கான மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா திரைப்படம் ஆகும்.

திட்டமிட்டபடி இன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சமூக வலைத்தளம் முழுக்க இந்த படம் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆதிபுருஷ் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராமனாக பிரபாஸ், ராவணனாக சைய்ப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்கள். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் படங்களுக்கு என்று இந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்த படமும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.

எப்போதுமே வரலாறு மற்றும் இதிகாச படங்களை கொண்டாடும் இந்திய சினிமாவில் இந்த படம் ஆரம்பத்திலிருந்து கேலிக்குள்ளாகியது. மோசமான vfx தொழில்நுட்பத்துடன் டிரைலரை வெளியிட்டு முதலிலேயே சர்ச்சைக்குள்ளானது இந்த படம்.

அதன் பின்னர் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ட்ரெய்லரை வெளியிட்ட கையோடு, படக்குழு இந்த படத்தின் ரிலீஸ் போது ஒவ்வொரு தியேட்டர்களிலும் அனுமனுக்கு என்று ஒரு சீட் ஒதுக்கப்படும் என சொல்லி இருந்தார்கள்.

ஆதிபுருஷ் படக்குழுவின் இந்த அறிவிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கான பல காட்சிகள் காலியாக இருக்கிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் நிறைய தியேட்டர்களில் பத்துக்கும் குறைவான டிக்கெட்டுகள் தான் பதிவாகி இருக்கின்றன. அனுமனுக்காக ஒரு சீட் மட்டும் விட சொன்னால், ஒட்டு மொத்த திரையரங்கையுமே விட்டுக் கொடுத்து விட்டார்கள் போல தெரிகிறது.

எனினும், வட இந்திய பகுதியின் தியேட்டர் ஒன்றில் முதல் காட்சியின் போது குரங்கு ஒன்று வந்திருக்கிறது. உடனே அங்கிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி பக்தி பரவசமாக இருக்கிறார்கள்.

மேலும் அனுமன் தான் இந்த படத்தை பார்க்க நேரில் வந்திருக்கிறார் என்று சொல்லி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரல் ஆக்கி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *