பொது இடத்தில் ‘அநாகரிக’ கேள்வி கேட்ட நிரூபர்! நடிகையின் செருப்படி பதில்

பொது இடத்தில் ‘அநாகரிக’ கேள்வி கேட்ட நிரூபர்! நடிகையின் செருப்படி பதில்
  • PublishedNovember 7, 2025

மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘அதர்ஸ்’ இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நிரூபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று அநாகரிகமான முறையில் நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

இதன்போது கவுரி கிஷனுக்கும் அந்த நிருபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த கவுரி கிஷன், “என்னுடைய உடல் எடையை தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் உடல் மீதான உரிமை அவருக்கு உண்டு. என்னுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியும்?

நீங்கள் உருவகேலி செய்வது தவறு. இந்த படத்துக்கும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் குண்டாக இருப்பதும், 80 கிலோ இருப்பதும் என்னுடைய சாய்ஸ். நான் என்னுடைய திறமையைதான் பேசவைப்பேன்.

நான் இங்கு இருக்கும் அனைத்து ஊடகத்தினரிடமும் கேட்டுக் கொள்கிறேன், உருவகேலியை இயல்பான விஷயமாக ஆக்காதீர்கள். இதே கேள்வியை ஒரு ஹீரோவிடம் கேட்பீர்களா? இது ஒன்றும் நகைச்சுவை இல்லை. இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் குறித்து எதுவும் கேட்கவில்லை. படம் குறித்து கேட்கவில்லை.ஆனால் இவ்வளவு முட்டாள்தனமான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல” இவ்வாறு கவுரி கிஷன் கோபமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *