“ஜவான்” 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளியானது…

“ஜவான்” 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்  வெளியானது…
  • PublishedSeptember 10, 2023

கடந்த ஏழாம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜவான் உலக அளவில் நல்ல கலெக்சனை பெற்று வருகிறது.

பாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் திருப்தியை கொடுத்திருக்கிறது. அதனால் ஜவான் அங்கு வசூலில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதன்படி முதல் நாளில் உலக அளவில் இப்படத்திற்கு 120 கோடி கலெக்சன் கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளிலும் ஜவான் 109 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது.

உலக அளவில் பார்க்கையில் மூன்றாவது நாள் மொத்த வசூல் மட்டுமே 140 கோடியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்றும் படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருக்கிறது. ஆக மொத்தம் ஜவான் வெளியான மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 370 கோடிகளை நெருங்கி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் போட்ட காசை தாண்டி ஷாருக்கானுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் அட்லியும் தன்னுடைய அஸ்திவாரத்தை பலமாகவே போட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *