படப்பிடிப்பின் போது மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பிய பிரபல நடிகையும், நடிகரும்…

படப்பிடிப்பின் போது மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பிய பிரபல நடிகையும், நடிகரும்…
  • PublishedMay 13, 2023

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார்.

அப்போது நடந்த திகில் அனுபவத்தை அவர் உணர்ச்சிவசப்பட விவரித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:-

நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் நடந்தது. அங்குள்ள லங்காவி கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நானும், விஜய் ஆண்டனியும் ஒரு படகில் கடலில் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது இன்னொரு படகு எங்கள் படகு மீது திடீரென மோதியது.இதில் படகில் இருந்த நானும், விஜய் ஆண்டனியும் கடலில் விழுந்தோம்.

நீரில் விழுந்ததும் எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு நிமிடம் சுதாரித்த பின்னர் விஜய் ஆண்டனியை பார்த்தேன். அவர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

அவருக்கு நீச்சல் தெரியவில்லை. எனவே அவரை காப்பாற்ற அவர் அருகில் நீந்தி சென்றேன். அதற்குள் படக்குழுவினரும் அங்கு வந்து விட்டனர். அவர்கள் உதவியுடன் விஜய் ஆண்டனியை மீட்டு படகில் ஏற்றினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *