KPY தீனா திடீர் திருமணம்!! குவியும் வாழ்த்துக்கள்… எப்படி இருக்காரு பாருங்க!

KPY தீனா திடீர் திருமணம்!! குவியும் வாழ்த்துக்கள்… எப்படி இருக்காரு பாருங்க!
  • PublishedJune 1, 2023

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை திருமணம் செய்துக் கொண்ட தீனாவின் திருமண புகைப்படங்களை கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தீனாவை வாழ்த்தி உள்ளார்.

பிராங்க் கால் செய்து போட்டியாளர்களையும் பிரபலங்களையும் பங்கமாக வச்சு செய்யும் தீனா மாப்பிள்ளை கோலத்தில் அப்படியே செம சாதுவாக இருக்கும் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.

கேபிஒய் தீனா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனலிஸ்ட் ஆனவர் தீனா.

எங்கிட்ட மோதாதே, சிரிப்புடா, அது இது எது, ரெடி ஸ்டெடி போ, பிக் பாஸ் ஜோடிகள் தொகுப்பாளர், பிக் பாஸ் அல்டிமேட் சிறப்பு விருந்தினர் என விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கிய தீனாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆனால், தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரிவிக்காமல் திடீரென இன்று காலை திருமணம் செய்துக் கொண்டு மணக் கோலத்தில் காட்சி தந்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஷாக் ஆக்கி உள்ளார்.

தீனாவுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தில் க்ளீனர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. படம் முழுக்க ஹீரோ கார்த்தி உடன் காமெடியனாக டிராவல் பண்ணும் காட்சிகளில் கலக்கிய தீனா மாஸ்டர் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் கமலின் இன்ட்ரோ பாடலான பத்தல பத்தல பாடலுக்கும் காமாட்சியாக வந்து ஆட்டம் போட்டு சென்றிருப்பார் தீனா.

கலக்கப் போவது யாரு தீனாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கேபிஒய் சரத் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *