லியோ படப்பிடிப்பில் உயர்தர கேமரா.. அப்டேட்டை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் மனோஜ் !
- PublishedMarch 5, 2023
லியோ படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் தளபதி 67 திரைப்படத்தின் மீது இருந்ததால், தொடர்ந்து அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.இதனால், ரசிகர்களுக்கு ஒரே நாளில் மொத்த அப்டேட்டையும் கொடுத்துவிட்டு தற்போது, நிம்மதியாக காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படத்திற்கு லியோ என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் விஜய், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மலையாள நடிகத் மேத்யூ, பிரியங்கா ஆனந்த், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து வெளியான டைட்டில் ப்ரோமோவில், நடிகர் விஜய் அதிரடியாக இரும்பை உருக்கி நெருப்பு குழம்பில் வாள் செய்தார். மேலும், அந்த வாளை சாக்லெட் குழம்பில் முக்கி எடுத்து ‘ Bloody sweet’ என பேசிய வசனம் இணையத்தையே அலறவிட்டு, மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. தளபதியின் ரசிகர்கள் இந்த வீடியோவை வேறலெவலில் வைரலாக்கினார்கள்.
லியோ படம் ஆயுத பூஜைக்கு வரும் அக்டோபர் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளதால், லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில், இப்படத்தில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் லீக்கானதால், படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லியோ படத்தின் ஷூட்டிங்கில் உயர்தர ரெட் (RED) கேமராக்கள் பயன்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில், பிக் டாடி எனக்குறிப்பிட்டு, லியோவில் போர் செய்வதற்கு என் கேமராக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறிள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், லியோ படத்தில் நிச்சயம் விஷூவல் ட்ரீட் இருக்கு என கருத்துக்களை கூறி வருகின்றனர். ரெட் பிராண்டைச் சேர்ந்த ராப்டார் எனும் மாடலைச் சேர்ந்த இந்த அதிநவீன கேமரா மூலம் 8 கிலோமீட்டர் தரத்தலும் துல்லியமாக வீடியோக்களை பதிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.