24 வயது நடிகை மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

24 வயது நடிகை மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
  • PublishedDecember 11, 2023

‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’ உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் தனது 24 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘காக்கா’ (Kaakka) படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் (Lakshmika Sajeevan).

பஞ்சமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இது தவிர அவர், ‘புழையம்மா’, ‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’, ‘ஒரு யமந்தன் பிரேமகதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘கூன்’ (Koon) படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், துபாயின் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலைப் பார்த்துகொண்டிருந்த லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இந்த திடீர் மரணம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக நவ.2-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கை கொடுக்கும்” என பதிவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *