உலகின் சிறந்த விஸ்கி நிறுவனத்திற்கு சொந்தக்காரர்கள் யார் தெரியுமா?

உலகின் சிறந்த விஸ்கி நிறுவனத்திற்கு சொந்தக்காரர்கள் யார் தெரியுமா?
  • PublishedDecember 2, 2024

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷாவாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிப்பு, தயாரிப்பு மட்டுமில்லாமல் மற்ற பிசினஸ்களிலும் தன்னுடைய மகனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஷாருக்கான்.

அவரது தியாவால் ஸ்காட்ச் விஸ்கி நிறுவனத்தை கடந்த ஆண்டில் துவங்கினார். இந்த நிறுவனத்தை தன்னுடைய மகன் ஆர்யன் கானுடன் இணைந்து அவர் நடத்தி வருகிறார். இதனிடையே, அவரது விஸ்கி பிராண்ட் உலக அளவில் சிறப்பான விஸ்கியாக தற்போது தேர்வாகியுள்ளது.

இதேவேளை, இந்த நிதியாண்டில் மட்டுமே இவர் 92 கோடி வரி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வரி செலுத்தும் தனி நபரில் நாட்டிலேயே அதிகமாக வரி செலுத்துபவர் என்ற பெருமையையும் ஷாருக்கான் பெற்றுள்ளார்.

12 ஆண்டுகள் பழமையான இந்த ஸ்காட்ச், குளிர்ச்சி இல்லாமல் மிகவும் சுவையூட்டப்பட்டதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் இவரது ஸ்காட்ச் விஸ்கி சிறந்த மதுபானமாக தேர்வாகியுள்ளது. தி டேஸ்டிங் அலையன்ஸ் சார்பில் சர்வதேச அளவில் சிறந்த மதுபானங்களுக்கான போட்டி நடத்தப்பட்ட நிலையில் அதில்தான் இந்த ஆண்டிற்கான சிறந்த மதுபானமாக ஷாருக்கானின் ஸ்காட்ச் விஸ்கி தேர்வாகியுள்ளது.

கடந்த ஆண்டில் தான் இந்த தொழிலில் ஷாருக்கான் நுழைந்தார். இருந்தபோதிலும் கடந்த ஆண்டில் மட்டுமே 200 முதல் 300 கோடி ரூபாய் லாபத்தை இந்த தொழில் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்த போதிலும் இவ்வளவு கோடி லாபத்துடன் பாராட்டுகளையும் இந்த தொழில் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆரியன் கானிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த விஸ்கி பிராண்டிற்கு ஏற்றபடி 3900, 7200 மற்றும் 4200 என விற்கப்படுகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குரிய பிரபலமாக ஷாருக்கான் உள்ள நிலை அவரது சொத்து மதிப்பு 7300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஷாருக்கானுடன் அடுததடுத்த பிசினஸ்களில் இணைந்துவரும் அவரது மகன் ஆரியன் கானின் சொத்து மதிப்பும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் மும்பையில் 37 கோடி ரூபாயில் இவர் வீடு வாங்கியுள்ளார்.

சாதாரண மிடில் கிளாஸ் இளைஞனாக சினிமாவில் நுழைந்த ஷாருக்கான், தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை மிகச் சிறப்பாக கவர்ந்து மிகப்பெரிய ஆளுமையாக பாலிவுட்டில் மாறியுள்ளார். தன்னை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்பதாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *