18 வயதில் கவர்ச்சியின் உச்சிக்கு சென்ற நடிகை! ஓபன் டாக்

18 வயதில் கவர்ச்சியின் உச்சிக்கு சென்ற நடிகை! ஓபன் டாக்
  • PublishedMay 15, 2023

இந்திய அளவில் பிரபலமான நடிகை ஷகீலா தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார்.

அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

அந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஷகீலாவை சில்க் ஸ்மிதா அறைய வேண்டும்.

ஒருகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஷகீலாவை சில்க் ஸ்மிதா ஓங்கி அறைந்துவிட்டார். சில்க் ஸ்மிதா அப்படி நடந்துகொண்டதை இன்றுவரை தன்னால் மறக்க முடியவில்லை என ஷகீலா பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதாவின் கையால் அறை வாங்கியதாலோ என்னவோ அவருக்கு போட்டியாகவே திரையுலகம் ஷகீலாவை முன்னிறுத்தியது. அதற்கு தகுந்தாற்போல் ஷகீலாவும் பல அடல்ட் படங்களில் நடித்தார்.

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து இறந்துபோக அவரது இடத்தை ஷகீலா கிட்டத்தட்ட நெருங்கினார். ஆனால் சில்க் இடத்தை அவரால் முழுவதுமாக பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஷகீலாவின் வளர்ச்சி அசுர வேகத்திலேயே இருந்தது.

ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள்.

ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

இந்நிலையில் ஷகீலா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளத். அதில், பேசிய அவர், “நான் மலையாளத்தில் அதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்றுதான் சொன்னேன். ஆனால் பலரும் நான் படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்னதாக நினைத்துக்கொண்டார்கள். அதை இப்போது தெளிவுப்படுத்த வேண்டியது என் கடமை.

நான்கு வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் சும்மாதான் இருந்தேன். அந்த காலகட்டத்தில் நான் ஏற்கனவே சம்பாதித்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டினேன்.

என்னிடம் இப்போது சொத்து என்று எதுவும் இல்லை கடவுள் மட்டும்தான் இருக்கிறார். என் உடம்பை நான் காட்டினேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை. நீங்களா பணம் தரப்போகிறீர்கள். எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு. அந்த குடும்பத்தை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் வாழ வேண்டும் அதனால் அப்படி செய்தேன். ” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *