நடிகர் யஷூக்கு பிறந்தநாளில் கட்அவுட்: மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்கள் பலி!

நடிகர் யஷூக்கு பிறந்தநாளில் கட்அவுட்: மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்கள் பலி!
  • PublishedJanuary 8, 2024

நடிகர் யஷ் பிறந்தநாளில் அவருக்கு பேனர் வைக்கச் சென்ற மூன்று ரசிகர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘KGF’ படம் மூலமாக இந்தியத் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் யஷ். கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் யஷின் 38வது பிறந்தநாள் இன்று. இதனை ஒட்டி அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இணையதளம் வாயிலாகவும் தங்களது வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், யஷின் பிறந்தநாளுக்காக நேற்று இரவு கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர் அவருக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்க சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, அந்த பேனர் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து கட் அவுட் வைக்கச் சென்ற மூன்று ரசிகர்களும் தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர். மேலும், சம்பவ இடத்திலேயே மூன்று ரசிகர்களும் உயிரிழக்க, மீதம் இருந்த மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யஷின் பிறந்தநாளன்று இப்படி மூன்று ரசிகர்கள் எதிர்பாராத விதமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு க்டவுட் வைத்த சிகர்களில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *