வயது 50க்கு மேல்… 6 மாதத்திற்கு ஒரு Boy… பகீரை கிளப்பும் ட்வீட்

வயது 50க்கு மேல்… 6 மாதத்திற்கு ஒரு Boy… பகீரை கிளப்பும் ட்வீட்
  • PublishedJune 11, 2023

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வரும் நடிகை தபுவுக்கு 51 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணமே செய்துக் கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தபு இந்த வயதிலும் 6 மாதத்துக்கு ஒருமுறை பாய் ஃபிரெண்டை மாற்றி வருகிறார் என உமைர் சந்து போட்டுள்ள ட்வீட் பகீரை கிளப்பி உள்ளது.

பாலிவுட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், தபு நடிக்கும் படங்கள் என்றாலே அந்த படங்கள் சாலிடாக 200 கோடி வசூல் உடன் ஹிட் அடித்து வருகின்றன.

தமிழில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்காமல் இருந்து வருகிறார் நடிகை தபு. நடிகர் அஜய் தேவ்கன் உடன் த்ரிஷ்யம் இந்தி ரீமேக், கைதி இந்தி ரீமேக்கான போலா உள்ளிட்ட பல படங்களில் இன்னமும் இணைந்து நடித்து வருகிறார்.

இயக்குநர் கதிர் இயக்கத்தில் தமிழில் வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் 1996ல் ஹீரோயினாக அறிமுகமானார். இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சல்மான் கான் பாலிவுட்டில் எப்படி இந்த வயதிலும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருந்து வருகிறாரோ அதே போல நடிகை தபுவும் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் டாப் ஹீரோயினாகவும் சீனியர் கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

நடிகை தபு பற்றி பாலிவுட்டில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பி வந்த நிலையில், தற்போது பாலிவுட் பயில்வான் ஆன உமைர் சந்து போட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை தபு இப்போதெல்லாம் ரொம்பவே மூடாக உள்ளார் என்றும் 6 மாத காலத்துக்கு ஒரு பாய் ஃபிரெண்டை மாற்றி வருகிறார் என்றும் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் இந்த வயதிலும் இளமையாக இருக்கலாம் என அவர் நினைக்கிறார் என படு மோசமான ட்வீட்டை போட்டுள்ளார்.

நடிகை தபுவின் ரசிகர்கள் உமைர் சந்துவை கமெண்ட்டில் கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்து வருகின்றனர். புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் முன்னதாகவே அந்த படங்களை பார்த்து விட்டதாகவும் படங்கள் ஃபிளாப் என்றும் ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார் உமைர் சந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *