ஆதித்த கரிகாலன் வீழ்ந்த அந்த நொடி… வெளியானது கடைசி வீடியோ

ஆதித்த கரிகாலன் வீழ்ந்த அந்த நொடி… வெளியானது கடைசி வீடியோ
  • PublishedMay 26, 2023

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.

இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்ற (சின்னஞ்சிறு மறுமுறை) பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *