தேவரா ட்ரெயிலர் – அதிரடி அப்டேட்டை வெளியிட்ட ஹீரோ

தேவரா ட்ரெயிலர் – அதிரடி அப்டேட்டை வெளியிட்ட ஹீரோ
  • PublishedSeptember 7, 2024

டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள தேவரான படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவரா படத்தில் பாலிவுட் நாயகி ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூரின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் வரும் 10ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *