சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக சியான் விக்ரம்?? நடக்கப்போவது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக சியான் விக்ரம்?? நடக்கப்போவது என்ன?
  • PublishedMay 16, 2023

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகியவற்றில் ஆதித்த கரிகாலனாக பார்வையாளர்களை கவர்ந்தவர், இந்தியாவின் பல்துறை நடிகர்களில் ஒருவராக புகழப்பட்டவர் தான் சியான் விக்ரம்.

பா ரஞ்சித்தின் ‘தங்கலன்’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக ஒத்திகை பார்க்கும்போது துரதிர்ஷ்டவசமாக அவருக்கு விலா எலும்பு முறிந்தது, ஒரு மாத ஓய்வுக்கு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.

இதற்கிடையில் இயக்குனர் டி.ஜேவால் கோலிவுட்டில் பலத்த பரபரப்பு கிளம்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் அதில் முக்கிய வில்லனாக நடிக்க விக்ரமை அணுகியுள்ளார் ஞானவேல்.

விக்ரமுக்கு கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயங்கினார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன், விக்ரமுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், அதுவும் ஒரே பேமெண்ட்டில் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒப்பந்தம் நிறைவேறுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *