அதிக சம்பளத்தை கேட்ட மாதவன்.. முடியாது என மறுத்த தயாரிப்பாளரை அசிங்கப்படுத்திய கொடுமை!

அதிக சம்பளத்தை கேட்ட மாதவன்.. முடியாது என மறுத்த தயாரிப்பாளரை அசிங்கப்படுத்திய கொடுமை!
  • PublishedMarch 1, 2023

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் தான் மாதவன். இவர் அலைபாயுதே படத்தின் மூலம் திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். இந்தப் படத்தின் மூலம் ஒரு காதல் ஹீரோவாக இவருக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கினார்.
மேலும் இத்திரைப்படம் வெளியான உடனே வணிகரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
பின்னர் அடுத்த படத்தில் இவர் நடிப்பதற்கு ஒரு தயாரிப்பாளரிடம் அதிக சம்பளத்தை கேட்டிருக்கிறார். அதற்கு அந்த தயாரிப்பாளர் இதற்கு முன்னால் உங்களுக்கு வெளிவந்த என்னவளே படம் சரியாக ஓடவில்லை. பிறகு எப்படி நீங்கள் இந்தப் படத்திற்கு அதிக சம்பளம் கேட்கிறீர்கள் என்று அசிங்கப்படுத்தி இருக்கிறார். அதற்கு மாதவன் நீங்கள் என் அழகு மற்றும் நடிப்பை வைத்து தான் சம்பளம் தருகிறீர்கள் என்று நினைத்தேன்.
இதுவரை நான் அப்படி நினைத்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார். பின்பு இவரின் அடுத்த படமான ரன் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி அடைந்தார்.

பிறகு அதே தயாரிப்பாளரை மாதவன் சந்தித்தார். அந்த தயாரிப்பாளரிடம் இப்பொழுது என்னுடைய படம் வெற்றி அடைந்திருக்கிறது. அதனால் நான் கேட்கும் சம்பளத்தை நீங்கள் கொடுப்பீர்களா என்று கேட்டிருக்கிறார்.
அந்த தயாரிப்பாளர் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். உடனே மாதவன் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு மிகப்பெரிய தொகையை கேட்டிருக்கிறார். இதை கேட்ட அந்த தயாரிப்பாளர் இவ்வளவு பெரிய தொகை என்னால் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்.
அதற்கு மாதவன் ஒரு படம் தோல்வி அடைந்தால் சம்பளம் குறைவாகத்தான் கிடைக்கும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.
இப்பொழுது நான் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருக்கிறேன். நான் கேட்டபடி சம்பளத்தை கொடுங்கள் இல்லை என்றால் வெளியே சென்று விடுங்கள் என்று அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
இதனால் ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குவது தயாரிப்பாளர்களால் தான் என்பது உண்மை. இதைப்பற்றி ஏற்கனவே சில சினிமா பிரபலங்கள் கூறி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *