காத்திருப்பு ஓவர்-தமிழ் புத்தாண்டில் வெளியாகவுள்ள சூர்யா42 டைட்டில் கிளிம்ப்ஸ்

காத்திருப்பு ஓவர்-தமிழ் புத்தாண்டில் வெளியாகவுள்ள சூர்யா42 டைட்டில் கிளிம்ப்ஸ்
  • PublishedMarch 13, 2023

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் சூர்யா 42. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைட்டில் மற்றும் அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவினரை மொய்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது டைட்டில் கிளிம்ஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிருணாள் தாக்கூர் போன்றவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் சூர்யா 42. இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் சென்னையில் துவங்கி, தொடர்ந்து கோவாவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. கோவாவில் சூர்யா மற்றும் திஷா பட்டானி இணைந்து நடித்த டூயட் பாடல் எடுக்கப்பட்டது. படத்திற்கு சிங்கம் படங்களை தொடர்ந்து தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகிவரும் சூர்யா 42 படம், இந்திய அளவில் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். முன்னதாக படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டபோது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த போஸ்டரின் மூலம் படம் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டு வருவதை ரசிகர்களை அறிந்துக் கொண்டனர்.

மேலும் படத்தில் சூர்யாவின் பிளாஷ்பேக் குறித்த கேரக்டர்களின் பெயர்களும் வெளியாகின. இருவேறு காலகட்டங்களில் நடைபெறும் கதைக்களத்தை மையமாக வைத்து சூர்யாவின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யா போர்வீரன் மற்றும் தற்போதைய காலகட்டத்திய இளைஞன் என இருவேறு கெட்டப்பில் படத்தில் நடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 14ம் திகதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக ஸ்டூடியோ கிரீன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு ஓவர் என்றும் விரைவில் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாகவும் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த போஸ்டரும் அந்தப் பதிவில் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட காத்திருப்புக்கு ஆளாகியுள்ள சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்தப்படம் என நடிகர் சூர்யா பயணிக்க உள்ளார். தன்னுடைய கேரியரில் தொடர்ந்து தேர்ந்தெடுத்தக் கதைகளில் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் சூர்யா. இவரது சூர்யா 42 படம் ரசிகர்களிடையே மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமர்ஷியல் ஹிட் கொடுத்துவந்த சிவா, இந்தப் படத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் இறங்கியுள்ளார். சூர்யாவும் அதற்கு கைக்கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *