குக் வித் கோமாளியில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கோமாளி : நான்காவது சீசன் தோல்விக்கு இவர்தான் காரணமாம்!

குக் வித் கோமாளியில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கோமாளி : நான்காவது சீசன் தோல்விக்கு இவர்தான் காரணமாம்!
  • PublishedMarch 8, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு இருந்து வருகிறது. அதாவது சமையல் நிகழ்ச்சியான இதில் கோமாளிகளை போட்டு நகைச்சுவையாக கொண்டு செல்கிறார்கள். மேலும் பல சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறியது. இதற்கு காரணம் ஒரு கோமாளி தான் என்ற ஒரு கருத்து அதிகமாக பரவி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, பாலா, குரேஷி, மணிமேகலை போன்ற பல கோமாளிகள் உள்ளனர்.

இவர்களால் தான் குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாம் சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதன் மூலம் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக கோமாளிகள்

வெள்ளித்திரையிலும் இறங்கி உள்ளனர். ஆனால் இப்போது கோமாளி புகழ் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதாவது செஃப் தாமுவை அப்பா என்றும், சிவங்கியை தங்கை என்றும் ஓவர் அலப்பறை கொடுப்பது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்ற பெயரில் பல அக்கப்போர்களை செய்து வருகிறார்.
குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன்கள் வெற்றியடைய இவரும் முக்கிய காரணம் என்றாலும் இப்போது அவரது நடவடிக்கை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி ரசிகர்களே இப்போது இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *