ஜவானை ஜவ்வாக இழுக்கும் அட்லீ..கோபத்தில் கொந்தளித்த ஷாருக்கான்

ஜவானை ஜவ்வாக இழுக்கும் அட்லீ..கோபத்தில் கொந்தளித்த ஷாருக்கான்
  • PublishedMarch 3, 2023

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், பதான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த ஷாருக்கான், தற்போது அட்லீ மீது கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.ரிலீஸுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், ஜவான் ஷூட்டிங் இன்னும் முடிவடையவில்லை என்பதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4 வருடங்களாக ரெஸ்ட் மோடில் இருந்த ஷாருக்கான், தற்போது பதான் வெற்றிக்குப் பின்னர் வைப்ரேட்டிங்காக காணப்படுகிறார். ஜனவரி இறுதியில் வெளியான பதான் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனுடன் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. நெட்டிசன்களின் பாய்காட் பிரசாரங்களை கடந்து பதான் வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஷாருக்கான் தனது ரெட் சில்லர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் அட்லீ மிகவும் பிரபலமானார். அதேநேரம் அவர் மீது கதை திருட்டு குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜவான் ஷூட்டிங்கை இன்னும் முடிக்காமல் ஜவ்வாக இழுத்து வருவதாக அட்லீ மீது கோபத்தில் உள்ளாராம் ஷாருக்கான்.

ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். பதான் படத்தின் ப்ரோமோஷன், ரிலீஸுக்குப் பின்னர் சக்சஸ் மீட் போன்றவற்றில் ஷாருக்கான் பிஸியாகிவிட்டார். அதனால் தான் சொன்ன தேதிக்குள் அட்லீயால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். ஆனால், ஜூன் 2ம் தேதி ஜவான் ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டதால் இப்போது அட்லீக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.

மும்பை, சென்னை பகுதிகளில் நடந்த ஜவான் ஷூட்டிங், தற்போது மீண்டும் மும்பையில் நடைபெற்று வருகிறதாம். பதான் வைப்பில் இருந்து வெளியேறிவிட்ட ஷாருக்கான், சீக்கிரமே ஜவான் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என அட்லீக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். ஏற்கனவே சொன்னதைவிடவும் பட்ஜெட்டில் பதம் பார்த்த அட்லீ, இந்தமுறை ஷூட்டிங் தேதியில் குளறுபடி செய்துவிட்டதால் தான் ஷாருக்கானும் டென்ஷனாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜவான் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே ஜவான் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதுவும் இல்லை என சொல்லப்படுகிறது. மேலும், ஜவான் ஷூட்டிங் முடிந்ததுமே உடனடியாக ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசரை வெளியிட ஷருக்கான் ரெடியாகிவிட்டாராம். ஜவான் ரிலீஸானதும் விஜய்யின் தளபதி 68 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை அட்லீ தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *