ஜவான் படத்திற்காக இசையமைத்ததுதான் சிறந்தது – அனிருத்!
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திற்காக தான் அமைத்திருக்கும் இசைதான் இதுவரை நான் இசையமைத்ததிலேயே சிறந்ததாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தகவல் சோசயில் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஷாருக்கானை பார்த்து வளர்ந்தவன் நான். இதுவரை நான் இசை அமைத்ததிலேயே இந்தப் படத்தில்தான் சிறப்பாக இருக்கும். இது அவருக்கான சமர்ப்பணமாக இருக்கும்’ என அனிருத் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.