நாக சைதன்யாவின் அசத்தல் நடிப்பில் கஸ்டடி படத்தின் டீஸர் வெளியானது
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகியது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த திரைப்படம் மற்றும் சிம்புவின் காம்பேக் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் மன்மதலீலை திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் முதல் முறையாக வெங்கட்பிரபு தெலுங்கு படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இதனை ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, பிரியாமணி, சம்பத் ராஜ் மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கஸ்டடி படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சியுடன் நிறைந்த கஸ்டடி படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.