பல வருடங்களாக திரிஷா வாழ்ந்த இரகசிய வாழ்க்கை அம்பலம்!! திகைத்துப் போன ரசிகர்கள்

பல வருடங்களாக திரிஷா வாழ்ந்த இரகசிய வாழ்க்கை அம்பலம்!! திகைத்துப் போன ரசிகர்கள்
  • PublishedMay 13, 2023

நடிகை த்ரிஷா பல வருடங்கள் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னதாக வருண் என்பவரை திருமணம் செய்வதாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கி நகராமல் அப்படியே நின்றுவிட்டது.

அதேசமயம் த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது தாய் உமா கிருஷ்ணன் தான் காரணம் என்றும், த்ரிஷாவை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார் என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. ஆனால் அதனை உமா தீவிரமாக மறுத்தார்.

இதற்கிடையே, த்ரிஷா திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என மாப்பிள்ளை வீட்டார் கண்டிஷன் போட்டதுதான் திருமணம் நின்றுபோனதற்கு காரணம் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் பொன்னியின் செல்வன் புரோமோஷனில் கலந்துகொண்ட அவரிடம் எப்போது திருமணம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

“எனது மனதுக்கு பிடித்தவரை பார்த்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். திருமணத்திற்கு பிறகு விவாகரத்து என்பதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இல்லை” என தெரிவித்திருந்தார்.

ஆனால் த்ரிஷா தெலுங்கு நடிகர் ஒருவருடன் பல வருடம் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அந்த நடிகர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த விஷயம் வெளியே வர ஆரம்பித்ததும் த்ரிஷாவை தெலுங்கு சினிமா கண்டுகொள்ளாமல் இருந்ததாம்.

இதன் காரணமாக அந்த ரிலேஷன்ஷிப் பாதியில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நடிகர் யாராக இருக்கும் அதனால்தான் வருணுடனான திருமணம் நின்றுவிட்டதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் த்ரிஷா பீக்கில் இருந்தபோது நடிகர் ராணா டகுபதியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் பப்புகளுக்கு சென்று பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின. எனவே அந்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதியாகத்தான் இருக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *