மீண்டும் இணையும் லவ் டு டே கூட்டணி!

மீண்டும் இணையும் லவ் டு டே கூட்டணி!
  • PublishedMarch 14, 2023

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

அதற்கு முன் மறுபடியும் ஒரு 100 கோடியை வசூலிக்க வேண்டும் என பிரதீப் கையில் எடுத்திருக்கும் கதை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. லவ் டு டே தயாரிப்பாளருடன் ஒரு படத்தை இயக்கி இவரே கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்களின் கஷ்டங்களையும் மகிழ்ச்சிகளையும் படமாக எடுக்க இருக்கிறார். இதற்கு அடுத்து ஜெயம்ரவி உடன் மீண்டும் சேர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றி படம் இதுவரை இன்னும் அமையவில்லை.

அதனால் கோமாளி 2 படத்தை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  2019 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமான கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக ஏற்கனவே நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *