முடிவுக்கு வரும் விஜய் டீவியின் முன்னணி சீரியல்!

முடிவுக்கு வரும் விஜய் டீவியின் முன்னணி சீரியல்!
  • PublishedMarch 7, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
மௌனராகம் சீரியலுக்கு பதிலாக விஜய் டிவியில் புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. விறுவிறுப்பான கதை திருப்பங்கள் இந்த வாரத்தில் இந்த சீரியலில் ஏற்பட இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைக் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் இந்த சீரியலில் முடிவு பெற்றுவிடுமோ என்று பீல் பண்ணி வருகிறார்கள்.

ஏற்கனவே கார்த்திக்கின் இரண்டாவது மனைவி காதம்பரிக்கு பிறந்த குழந்தைதான் ஸ்ருதி ஆனால் ஸ்ருதி காதம்பரிக்கு இன்னொருவர் மூலமாக பிறந்த குழந்தை. இந்த உண்மை இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்த உண்மை தெரிய வரும்போது இந்த நாடகம் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலையில் தற்போது மிக விரைவாக நாடகம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியேறி இருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதால்தான் இதில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ரவீணா விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *