யூடியூப் சேனல்களை குறிவைக்கும் உதயநிதி!

யூடியூப் சேனல்களை குறிவைக்கும் உதயநிதி!
  • PublishedMarch 18, 2023

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்  கண்ணை நம்பாதே என்ற திரைப்படம்  வெளியாகி உள்ளது. இத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு வீச்சாக அரசியலில் செயல்பட இருக்கிறார். ஆனாலும் உதயநிதி பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி விநியோகஸ்தராக வளம் வந்து கொண்டிருக்கும் அவர், தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் டாப் நடிகர்களின் படங்கள் வினியோகம் செய்கிறார்.

அதுமட்டுமின்றி பல யூடியூப் பிரபலங்களுக்கு உதயநிதி கேமரா போன்ற தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி கொடுத்துள்ளாராம். அவர்களிடம் திமுகவுக்கு ஆதரவாகவும்,  திமுகவை எதிர்த்து பேசுபவர்களை திட்டவும் செய்ய வேண்டும் என்ற உதயநிதி கூறியுள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ஆரம்பத்தில் கருணாநிதி,  ஸ்டாலின்,  உதயநிதி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இப்போது இந்த யூடியூப் சேனலை உதயநிதி வாங்கி சித்திரம் தொலைக்காட்சிக்கு பதிலாக பிளாக் ஷீப் சேனலை ஒளிபரப்புகிறார். எப்படி பிளாக் ஷீப்புக்கும் உதயநிதிக்கும் உறவு வந்தது என்பதை சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.

இந்நிலையில்  சாட்டை துரைமுருகனின் கருத்திற்கு  தற்போது உதயநிதியின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *