மொய் பணத்தால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் : டீ.ஆர்.பியை பிடிக்க இயக்குனர் போட்ட திட்டம்!

மொய் பணத்தால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் : டீ.ஆர்.பியை பிடிக்க இயக்குனர் போட்ட திட்டம்!
  • PublishedMarch 18, 2023

குடும்பத்தின் ஒற்றுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சீரியல் தான் பாண்டியன்ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பிகளுக்கு இடையில் இருக்கும் பாச போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்ந்து வருகிறது.

ஆனால் சமீபகாலமாக சீரியலில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இதனால் டீ.ஆர்.பி ரேட்டிங்கில் பின் தள்ளப்பட்டது. இந்த நிலையில், டீ,ஆர்.பி ரேட்டிங்கை டார்க்கட் செய்து இயக்குனர் கதையை நகர்த்தி வருகிறார்.

இப்பொழுதுதான் கதை கொஞ்சம் சூடுபிடித்துள்ளது. தற்போது பணத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை எடுத்துள்ளார்கள். அந்தவகையில் மீனாவின் தங்கையின் திருமணத்திற்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொய் பணம் எழுதுவதில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாக குடும்பம் பிரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

இவை எல்லாவற்றிற்கும் அத்திவாரம் போட்டது கடைக்குட்டி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிதான். இவர்கள் ஒருபுறம் இருக்க கதிர், முல்லை இருவரும் இணைந்து தனியாக மொய் பணம் வைக்கிறார்கள். இப்படியாக, கண்ணன்-ஐஸ்வர்யா, கதிர்-முல்லை, மூர்த்தி-தனம் என தனித்தனியாக மொய் பணத்தை செலுத்துகிறார்கள்.

இதனால் மனமுடைந்து போகும் ஜீவா வீட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *