தெலுங்கில் நடிக்கவுள்ள ஜான்வி கபூர் – சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

தெலுங்கில் நடிக்கவுள்ள ஜான்வி கபூர் – சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
  • PublishedMarch 5, 2023

ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் தான் அதிகம் நடித்து வருகிறார். இருந்தாலும் அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அதை பற்றி கேட்டால் ‘விரைவில்’ என்ற ஒரே பதிலை தான் ஜான்வி பேட்டிகளில் கூறி வந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக NTR30 படத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு படத்தில் நடிக்க ஜான்வி 4 கோடி ருபாய் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். சமந்தா உள்ளிட்ட சில டாப் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தை தனது முதல் தெலுங்கு படத்திலேயே ஜான்வி வாங்குவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்ரீதேவி மகள் என்பதாலும், ஜான்விக்கு பெரிய ரசிகர் கூட்டம் இங்கே இருக்கிறது என்பதாலும் இவ்வளவு சம்பளம் தரப்படுவதாக தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *