வடிவேலுவின் சோலியை அப்பவே முடிச்சிருப்பேன் : பிரபல நடிகர்!

வடிவேலுவின் சோலியை அப்பவே முடிச்சிருப்பேன் : பிரபல நடிகர்!
  • PublishedMarch 5, 2023

வடிவேலுவால் சினிமா வாய்ப்புகள் பறிப்போன நடிகர் ஒருவர் அவரை கொலை செய்யும் அளவிற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அவர்கள் மற்ற நடிகர்களை கலாய்ப்பது, வயிறு குலுங்க சிரிக்க வைப்பது, அவர்களது காமெடியான ஆக்ஷன் காட்சிகள் இவை அனைத்துமே ரசிகர்களை கவரும். அன்றைய நடிகர் நாகேஷ் முதல் இன்றைய யோகிபாபு வரை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்களை கட்டாயம் இயக்குனர்கள் வைத்து விடுவார்கள்.
அப்படி பல காமெடிகளை செய்து, இன்று மீம்ஸ்களின் மன்னனாக வலம் வரும் வடிவேலு அவர்களை கொலை செய்யும் அளவிற்கு பிரபல நகைச்சுவை நடிகர் முற்பட்டுள்ளார்.
நடிகர் வடிவேலு, இயக்குனர் ராஜ்கிரண் இயக்கி நடித்த என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் தொடர்ச்சியாக தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி நடித்து வந்தார் வடிவேலு.

அந்த வகையில், இயக்குனர் ராஜ்கிரண் அலுவலகத்தில் பணிபுரிந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் தான் நடிகர் சிசர் மனோகர். இவர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், வடிவேலுவால் தனது சினிமா வாய்ப்புகள் பறிப்போனதாக கூறியுள்ளார்.
மேலும் வடிவேலு எனக்கு வரும் கதாபாத்திரங்களையெல்லாம் தட்டி பறித்துக்கொண்டதாக தெரிவித்த சிசர் மனோகர், இயக்குனர் சிங்கம்புலி இயக்கத்தில் உருவான 23ஆம் புலிகேசி படத்தில் இளவரசன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் தான் நடிக்க வேண்டியது என தெரிவித்தார்.
மேலும் அப்படத்தில் என்னை இளவரசராக நடிக்க விடாமல், ஒரே ஒரு காமெடி காட்சியில் மட்டும் பயன்படுத்திவிட்டு, அப்படத்தில் சிறையில் அடைத்து விட்டார் வடிவேலு என தெரிவித்தார்.
ஆரம்பத்தில் வடிவேலுவுக்கு உறுதுணையாக இருந்த என்னை, வடிவேலு வளர்ந்த பின் தன்னை கண்டுக்கொள்ளவே இல்லை என வேதனை தெரிவித்தார். மேலும் தனக்கு வந்த கோபத்திற்கு வடிவேலுவை தீர்த்து கட்டலாம் என நினைத்தாராம் சிசர் மனோகர். ஆனால் அச்சமயத்தில் இயக்குனர், நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் தன்னை ஆறுதல்படுத்தியதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *