வீரசிம்ஹா ரெட்டி படத்தை பார்த்துவிட்டு விமர்சித்த விஜய்.. குதூகலத்தின் உச்சியில் வரலட்சுமி..

வீரசிம்ஹா ரெட்டி படத்தை பார்த்துவிட்டு விமர்சித்த விஜய்.. குதூகலத்தின் உச்சியில் வரலட்சுமி..
  • PublishedMarch 6, 2023

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ளார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் சூட்டிங்கை இந்த மாதத்திற்குள் முடிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ள அதற்கான மும்முரத்துடன் படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர்கள் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப்படம் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது. கடந்த மாதத்தின் துவக்கத்தில் இந்தப் படத்தின் டைட்டில், நடிகர், நடிகைகள் என அப்டேட் கொடுத்த படக்குழு தொடர்ந்த சூட்டிங்கிற்காக காஷ்மீர் புறப்பட்டு சென்றது.

காஷ்மீரில் கடுமையான குளிரிலும் லியோ படத்தின் சூட்டிங் தொடர்ந்து வருகின்றது. இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சென்னையில் சில பேட்ச் வொர்க்கை மட்டும் செய்யவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மே மாதத்திற்குள் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ரிலீசுக்கான வேலைகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய படங்களின் சூட்டிங் ஒருபுறம் இருந்தாலும் சக நடிகர்களின் வேலைகளையும் பாராட்டுவதில் சிறப்பானவராக நடிகர் விஜய் காணப்படுகிறார். மற்ற படங்களை பார்ப்பதுடன், அதை தொலைபேசி மூலம் பாராட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிகை வரலட்சுமியின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து வெளியானது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி. இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் வரலட்சுமியும் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், நடிகர் விஜய்யும் படத்தில் தன்னுடைய நடிப்பை பாராட்டியதாக வரலட்சுமி தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

படத்தை பார்த்துவிட்டு வரலட்சுமியின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக விஜய் மெசேஜ் செய்திருந்ததாக நடிகை வரலட்சுமி தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார் படத்தில் முன்னதாக முருகதாஸ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *