நிறைவேறாமல் போன மயில்சாமியின் கடைசி ஆசை!

நிறைவேறாமல் போன மயில்சாமியின் கடைசி ஆசை!
  • PublishedFebruary 21, 2023

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மயில்சாமி நேற்று காலமானார்.

அவர்இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985-ம் வருடம் வெளியாகிய கன்னிராசி திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும்.

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மயில்சாமி பலகுரல் மன்னனாக திகழ்ந்தவர். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 – ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர் நடிகர் மயில்சாமி.

அத்துடன் பெருந்தொற்று கொரோனாவால் பலரும் அவதிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தவர் தான் நடிகர் மயில்சாமி. இந்த நிலையில், அவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

 

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட நிலையில், தான் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு செய்தியை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார்.

இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற ட்ரம்ஸ் சிவமணி மயில்சாமியின் கடைசி ஆசை என்ன என்பதை கூறியுள்ளார். அதாவது மேகநாதன் கோவிலுக்கு நடிகர் விவேக்கை அழைத்து சென்று  இருக்கிறேன். அதேபோல், பல பிரபலங்களையும் நான் அழைத்து வந்துள்ளேன்.

ஆனால், எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்த மேகநாதஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அவரின் கையால் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்று மயில்சாமி தன்னுடைய ஆசையை சிவமணியிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *