விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்… சுசித்ரா மீண்டும் போட்ட குண்டு

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்… சுசித்ரா மீண்டும் போட்ட குண்டு
  • PublishedMay 19, 2024

பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா பல திடுக்கிடும் தகவல்களை கூறி, சினிமா வட்டாரத்தையே திணறடித்து வருகிறார்.

தற்போது அவர் அளித்த இரண்டாவது பேட்டியில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கான காரணத்தை கூறி மீண்டும் புயலை கிளப்பி உள்ளார்.

சினிமா பக்கம் வராமல் இருந்த நடிகை சுசித்ரா, தனக்கு என்று சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், திரைப்பட விமர்சனம் குறித்து பேசி வருகிறார்.

இதையடுத்து குழந்தை வளர்ப்பு குறித்து பேசிய சுசித்ரா, விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கு என்ன காரணம் என தெரியுமா என கேட்டு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதில், விஜய் ஆண்டனி படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக தன்னுடைய உடல் அமைப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருக்கிறார். இதேபோன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மீரா, விஜய் ஆண்டனியிடம் கேட்டுள்ளார்.

அவருடம், மீரா கேட்கும்போதெல்லாம் ஒரு சில நாடுகளின் பெயர்களை சொல்லி, கண்டிப்பாக அங்கு கூட்டிட்டு போய் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். மீரா, தற்கொலை செய்து கொண்ட அன்று, பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன விஜய் ஆண்டனி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து விட்டு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து வைக்க முடியாது என்று கோபமாக சொல்லிவிட்டு போய் விட்டாராம்.

விஜய் ஆண்டனியின் பேச்சால் மனம் நொந்து போன மீரா, தற்கொலை செய்து கொண்டதாக சுசித்ரா தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். சுசித்ரா பேசி வரும் பல விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *