விஜய் 69 – ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புதிய அப்டேட்

விஜய் 69 – ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புதிய அப்டேட்
  • PublishedMay 19, 2024

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். விஜய் கேரியரில் இறுதிப் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன.

விரைவில் இதற்கான பதில் தயாரிப்பு தரப்பிடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தளபதி 69 படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போதைய புதிய தகவலாக சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளி விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதனுடன் சேர்த்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் ஹீரோயின் குறித்தும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல மாஸ் படங்களை கொடுத்துள்ள ஹெச் வினோத் விஜய்யின் இறுதிப்படத்தை இயக்கவுள்ள சூழலில் இந்த படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *