மீண்டும் இணைந்த வனிதா – ராபர்ட் மாஸ்டர்… மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா????

மீண்டும் இணைந்த வனிதா –  ராபர்ட் மாஸ்டர்… மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா????
  • PublishedMay 19, 2024

வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து பிரிந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து இப்படத்தில் நடிக்க உள்ளதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகை வனிதா, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்டு 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண பந்தம் 5 ஆண்டுகள் நீடித்த நிலையில், 2012-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா ஓரிரு நாட்களில் அவரையும் பிரிந்தார். இதற்கு முன்னதாக நடிகரும் நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டருடன் வனிதா வாழ்ந்து வந்தார்.

இவர்கள் இருவர் தொடர்பான செய்திகள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் நண்பர்களாக பழகி வரும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் நடித்த எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தில் வனிதா நடித்திருந்தார். அதன் பின் இருவரும் பிரிந்தனர். தற்போது ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்கிற படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிக்க உள்ளனர்.

இந்த படத்திற்கான பூஜை மாரியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் வனிதாவின் அப்பாவாக ரவிகாந்தும் அம்மாவாக ஷகீலாவும் நடிக்க உள்ளனர் இவர்களுடன் நடிகர் பிரேம்ஜி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் கமிட்டாகி உள்ளனர்

ராபர்ட் மாஸ்டர் வனிதா காதலித்து பிரிந்து இருந்தாலும், ராபர்ட் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வனிதா தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பின் பேட்டி அளித்த ராபர்ட் மாஸ்டர், எந்த நினைவுகளையும் என்னால் மறக்க முடியாது. ஒருவர் மீது உண்மையான அன்பும் பாசமும் வைத்துவிடுவேன். அவர்கள் ஏமாற்றினால் கூட எனக்கு தெரியாது. இந்த மாதிரியான விஷயங்களில் தான் நான் ஏமாந்திருக்கிறேன். நான் எனது கையில் வனிதா என்று தான் டாட்டூ போட்டிருந்தேன். ஆனால் வாழ்க்கையில் வரும் வெறொரு பெண் இதை பற்றி கேட்டால் என்ன செய்வது என்று அதை அழித்துவிட்டேன். ஆனால் அதை நான் முழுமனதாக செய்யவில்லை. ஆனால் அதை பற்றிய ஞாபகங்கள் இன்னும் என் நினைவில் உள்ளது என்று பேசி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *