20 கோடி சம்பளம் – யஷ் படத்துக்கு நோ சொன்ன லேடி சூப்பர் ஸ்ட்டார்

20 கோடி சம்பளம் – யஷ் படத்துக்கு நோ சொன்ன லேடி சூப்பர் ஸ்ட்டார்
  • PublishedMay 15, 2024

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் யஷ் தற்போது நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் வலுவான அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்திலும் அதே போல ஹீரோயினை தாண்டி முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்று உள்ளது எனக் கூறுகின்றனர். அந்த படத்தில் அவருக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூர் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், கால்ஷீட் காரணமாக தன்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது என கரீனா கபூர் நோ சொல்லிவிட்டதாக கூறுகின்றனர்.

கரீனா கபூர் நோ சொன்ன நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் கேட்கிறார் நயன்தாரா என்றும் வதந்திகள் பரவின. ஆனால், தற்போது நயன்தாராவும் அந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், லேட்டஸ்ட் தகவலாக அஜித்தின் வலிமை படத்தின் நாயகியாக நடித்த ஹூமா குரேஷி தான் யஷ்ஷுக்கு அக்காவாக நடிக்கப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலா, வலிமை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், குறைந்த சம்பளத்தில் அவர் இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குனு முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *