நான் ஓரினச்சேர்க்கையாளரா? கேவலப்படுத்திய மனைவிக்கு பதிலடி

நான் ஓரினச்சேர்க்கையாளரா? கேவலப்படுத்திய மனைவிக்கு பதிலடி
  • PublishedMay 14, 2024

இன்று காலை முதலே இணையத்தை முழுவதும் ஆக்கிரமித்து உள்ள செய்தி சுசித்ராவின் வைரல் வீடியோக்கள் தான்.

சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள நிலையில் தனது கணவர் கார்த்திக் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

அதாவது கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர். இதை திருமணமான ஒரே ஆண்டில் நான் தெரிந்து கொண்டேன்.

மேலும் மருத்துவர் கூட இதை கண்டுபிடித்து கூறினார். இதைப்பற்றி கார்த்திக் குமாரிடம் கேட்டபோது இந்த விஷயத்தை மழுப்பி விட்டார். கிட்டத்தட்ட 12 வருடமாக அவரிடம் விவாகரத்து கேட்டு போராடினேன். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால்தான் எங்களுக்கு குழந்தை இல்லை.

அதோடு தனுஷ் உடன் ஒரே ரூமில் கார்த்திக் இருப்பார். மேலும் நண்பர்களுடன் இரவு 3 மணிக்கு ஹோட்டலில் ஒன்றாக சேர்ந்து இருப்பார்கள் என்று பல விஷயங்களை கார்த்திக்கை அசிங்கப்படுத்தும் விதமாக சுசித்ரா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கார்த்திக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தால் அதை நினைத்து வெட்கப்படும் ஆள் நான் கிடையாது. இங்கிருக்கும் பாலுணர்வு பெருமைப்பட வேண்டியது தான்.

ஸ்பெக்ட்ரமில் எந்த விதமான பாலுணர்வாக இருந்தால் பெருமை படுவதோடு மட்டுமல்லாமல் நகரத்தில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்வேன். இதில் எந்த அவமானமும் இல்லை, பெருமை மட்டுமே இருக்கிறது என்று கார்த்திக் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *