இந்த நடிகர் எனக்கு வேணாம் – நடிகையின் வெளிப்படையான பேச்சு.
தமிழில் தேன் ,ஜெயில் போன்ற படங்களில் திறமையான நடிப்பின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை அபர்ணதி.
மேலும் இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு எல்லோராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் நடிகை அபர்ணதி, ஆர்யாவுடன் நடிப்பது குறித்து பேசியபோது அதில் அவர், நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் செய்து இருக்கிறேன்.நல்ல நினைவுகள் உள்ளன.
ஆகவே ஒரு Fake கதையை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை என கூறியுள்ளார்.