பிரதமர் சொன்ன வாழ்த்து – யார் அந்த திரைபிரபலம்.

பிரதமர் சொன்ன வாழ்த்து – யார் அந்த திரைபிரபலம்.
  • PublishedFebruary 25, 2026

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமணம் நாளை உதய்பூரில் நடக்கிறது. இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் மணமக்களின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதேவேளை திருமண வரவேற்பு நிகழ்வு மார்ச் 4ஆம் திகதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “பிப்ரவரி 26, 2026 அன்று இடம்பெறும் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சிய்டைகிறேன். இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான தருணத்தில் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய, அழகான அத்தியாயத்தை தொடங்குகின்றனர். இது வெள்ளித்திரையில் அவர்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை மிஞ்சும் என நம்புகிறேன். சிந்தனையுடனும் அன்புடனும், இருவரும் அவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளட்டும். இந்த முக்கியமான தருணத்தில் தம்பதியினருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *