ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட நகைகள் மீட்பு – சிக்கிய நபர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் தனியாக வசித்து வருகிறார்.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடுபோனது குறித்து வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி (வயது 40) என்பவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். ஈஸ்வரியின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் திருடியது உறுதி செய்யப்பட்டாதாக பொலிஸார் தரப்பில் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் உடன் சேர்ந்து லாக்கரிலிருந்து சிறிது சிறிதாக தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி வந்துள்ளனர். மேலும் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து சுமார் 100 சவரன் தங்கம் மற்றும் 30 வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது.