திரிஷியம் திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்!
மோகன்லால் மீனா நடிப்பில் உருவாகி திரிஷ்யம் திரைப்படம் வெளியாகு இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது.
5 கோடி ரூபாய் பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி 75 கோடி ரூபாய் வறுமானம் ஈட்டியது.
இதனையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வரவேறப்பை பெற மூன்றாவது பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் இரசிகர்கள் காத்திருந்தனர்.
இதையடுத்து இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது என்றும் அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரிஷ்யம்’ படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.