மனைவி சொல்லே மந்திரம் என்று மாறிய விமல்!

மனைவி சொல்லே மந்திரம் என்று மாறிய விமல்!
  • PublishedMarch 19, 2023

எதார்த்தமான நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நகைச்சுவை நடிகராகவும் மக்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இருப்பினும் சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளிவில் ஓடவில்லை.

அத்துடன் இவர் நடிப்பில் உருவாகிய 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகளவு மதுபழக்கத்திற்கு அடிமையாகிய விமலுக்கு அண்மையில் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது.

இவையொருப்புறம் இருக்க அவருடைய மனைவி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது   நான் ஒரு டாக்டராக இருந்தும் மதுவுக்கு அடிமையான உன்னை திருத்த முடியவில்லை. நீயும் சொல்வதை கேட்பதாக இல்லை. இனிமேல் உன்னுடன் வாழ்வது தேவையற்றது என சோசியல் மீடியாவில் ஒரு பதிவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் பயந்து போன விமல் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது தான் அவரின் மனைவி ஏகப்பட்ட கண்டிஷன்களை கூறி இதற்கு சம்மதித்தால் சேர்ந்து வாழலாம் என்று செக் வைத்திருக்கிறார்.

இதைக் கேட்ட விமலும் மனைவி சொல்லே மந்திரம் என அதற்கு ஒப்புக்கொண்டு தற்போது முற்றிலும் மாறி இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு புது வாழ்க்கையையும் ஆரம்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *