பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில், உதய்பூரில் இன்று நடைபெற்றது.
இன்று காலை 10:10 மணிக்கு மணமகனின் தெலுங்கு கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இவர்களின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.