ராதிகாவுக்கு ஊட்டி விடும் பாக்கியா… அட இது எப்ப நடந்திச்சி?

ராதிகாவுக்கு ஊட்டி விடும் பாக்கியா… அட இது எப்ப நடந்திச்சி?
  • PublishedJuly 1, 2024

தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளரான பிரசாத் அவர்களின் மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. கடந்த 2015-ம் ஆண்டு தமிழில் வெளியான “மசாலா படம்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரேஷ்மா.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, சீரியல்களில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமன்றி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களையும் அள்ளுகின்றார்.

அந்த வகையில், தற்போது பாக்கியலட்சுமி சீரில் சூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *