பாலிவுட்டின் மிக முக்கிய புள்ளி சுட்டுக்கொலை
பாலிவுட்டில் இடைத்தரகராக செயல்பட்டவரும் அரசியல்வாதியுமான பாபா சித்திக் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் முக்கிய பிரமுகராக இருந்தவர். 66 வயதான பாபா சித்திக் பாந்த்ரா மேற்கு பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.
பாந்த்ரா கிழக்கில் உள்ள தனது மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றது.
பாபா சித்திக் படுகொலை மகாராஷ்டிராவைத் தாண்டியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பாபா சித்திக் படுகொலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் கண்டன குரல் எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்சிபியின் தேசிய தலைவருமான அஜித் பவார், இன்று அமராவதியில் நடைபெறவிருந்த தனது ஜன்சன்மன் யாத்திரையை ரத்து செய்தார்.