விஜய் மகனை கழட்டிவிட்ட அனிருத்… அப்பாவிடம் ஓடிய ஜேசன் சஞ்சய்

விஜய் மகனை கழட்டிவிட்ட அனிருத்… அப்பாவிடம் ஓடிய ஜேசன் சஞ்சய்
  • PublishedNovember 21, 2024

நடிகர் விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள சூழலில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதற்காக அவர் பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டும் வந்தார். குறிப்பாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜேசன் சஞ்சய்க்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார்.

ஆனால் சஞ்சய், தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என சொன்னதால், அவர் விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே செய்யட்டும் என விஜய்யும் விட்டுவிட்டார்.

இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. அப்படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய ஜேசன் சஞ்சய், இறுதியாக நடிகர் சந்தீப் கிஷானை கமிட் செய்துள்ளார்.

மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பார் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், இப்படம் குறித்த அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *