கோலாகலமாக நடந்து முடிந்த பிக்பாஸ் ஃபினாலே.. 4 மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் டைட்டிலை வென்ற போட்டியாளர்

கோலாகலமாக நடந்து முடிந்த பிக்பாஸ் ஃபினாலே.. 4 மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் டைட்டிலை வென்ற போட்டியாளர்
  • PublishedJanuary 19, 2025

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதி கொண்டாட்டம் நடைபெற்றுள்ள நிலையில் இன்று அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதன்படி ஒட்டுமொத்த மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்துக்குமரன் தான் இந்த சீசன் டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். நிகழ்ச்சியை ஆரம்பித்த சில வாரங்களிலேயே இது கணிக்கப்பட்டது.

இருந்தாலும் சௌந்தர்யாவின் இணைய கூலிகள் பயங்கர டஃப் கொடுத்தனர். ஒருவேளை அவர் ஜெயித்து விடுவாரோ என்ற ரேஞ்சுக்கு சோசியல் மீடியாவில் பயங்கர அலப்பறை இருந்தது.

அதிலும் முத்துக்குமரனை கீழிறக்கும் அளவுக்கு நெகட்டிவ் கமெண்ட்டுகளையும் அவர்கள் பரப்ப தொடங்கினர். ஆனால் திறமைக்கு தோல்வி கிடையாது என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

அதன்படி வெற்றியாளராக கோப்பையை கைப்பற்றியுள்ள அவர் பரிசுத்தொகையையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது ரன்னராக விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது ரன்னராக சௌந்தர்யா நான்காவது இடத்தை ரயான் ஐந்தாவது இடத்தை பவித்ரா ஆகியோர் பிடித்துள்ளனர். இதை முத்துக்குமரனின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

அது மட்டும் இன்றி அவருக்கு கிடைத்த வாக்குகளும் மிக மிக அதிகம். இரண்டாவது இடத்தை பிடித்த விஷாலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 4 மடங்கு அதிக ஓட்டுக்களை முத்து பெற்றிருக்கிறார்.

இப்படியாக இந்த சீசன் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த செய்திகள் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து வரும் நிலையில் நிகழ்ச்சியை டிவியில் காண ரசிகர்கள் துடிப்புடன் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *