பொன்னியின் செல்வன் 2 பாடல் சர்ச்சை – ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த விளக்கம்.

பொன்னியின் செல்வன் 2 பாடல் சர்ச்சை – ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த விளக்கம்.
  • PublishedFebruary 22, 2026

பொன்னியின் செல்வன் பட இரண்டாம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘வீரா ராஜ வீர…’ பாடல் சர்ச்சையில் சிக்கியதையடுது இப்பாடலுக்கு எதிராக கர்நாடக இசை பாடகர் வாசிஃபுதீன் தாகர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இப்பாடல் தன் தந்தை இயற்றிய சிவா ஸ்துதி பாடல் போல் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலாக ‘வீரா ராஜ வீர’ பாடல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் வீரா ராஜ வீர பாடல் சிவா ஸ்துதி பாடலில் இருந்து உந்துதல் பெற்று உருவாக்கியது மட்டுமல்லாமல் அதை போன்றே இருப்பதால் ரூ.2 கோடி நீதிமன்ற பதிவாளரிடம் வாய்ப்பு செய்ய வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பினருக்கு தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மனு தாரர் தரப்பிற்கு படக்குழு தரப்பு ரூ.2 லட்சம் அபராதம் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மீண்டும் நீதிபதிகள் உறுதி செய்தனர். மேலும் ரூ. 2 கோடியை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஏ.ஆர். ரஹ்மான் வைப்பு செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “இசைக் கோர்வையை இயற்றியது யார்? அதன் உண்மைத்தன்மை, காப்புரிமை மீறல் குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. சுமூக தீர்வு காணும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்க ஒப்புக் கொண்டேன்” என்று தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *