சூர்யா 47 – இயக்குநர் கொடுத்த மாஸ் அப்டேட்.

சூர்யா 47 –  இயக்குநர் கொடுத்த மாஸ் அப்டேட்.
  • PublishedFebruary 22, 2026

மலையாள இயக்குநர் ஜித்து மாதவனுடன் சூர்யா இணைவது என்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

2026-ம் ஆண்டின் தொடக்கமே தமிழ் சினிமாவிற்குப் பெரிய நட்சத்திரங்களின் மோதல்களுடன் களைகட்டி வரும் நிலையில், இந்த சூர்யா 47 அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் தனது முந்தைய படமான ‘ஆவேசம்’  மூலம் தென்னிந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் சூர்யாவுடன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் ஜித்து மாதவன் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “சூர்யா 47 முழுக்க ஒரு தமிழ் திரைப்படம்” என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் இல்லை,நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களம் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே சூர்யா 47 பக்கா மாஸ் திரைப்படமாக இருக்கப்போகிறது என்பது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *