வழக்கை வாபஸ் பெற்ற ரவிமோகன் – எந்த படத்துக்கு என்று தெரியுமா?
ரவி மோகன் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘ப்ரோ கோட்’ கார்த்திக் யோகி இயக்கும் இப்படதுக்கான இசைப் பணிகளை ஹர்ஷவர்தன் ரமேஷ் குமார் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தது. ப்ரோ கோட் என்ற பெயரை தங்கள் நிறுவனம் பதிப்புரிமை செய்து வைத்திருப்பதால் அதை படத்தில் பயன்படுத்தக்கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு தெரிவித்தது. இதையடுத்து ப்ரோ கோட் என்ற பெயரை தனது படத்துக்கு பயன்படுத்த தடுக்கக்கூடாது என குறித்த மதுபான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என ரவி மோகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதன்படி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த தடுக்கக்கூடாது என அந்த மதுபான நிறுவனத்துக்கு மூன்று மாதம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார். அதன் படி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது , சமரசம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்ததை அடுத்து ரவிமோகன் தரப்பில் வழக்கு வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிட தக்கது.