கள்ளக்காதலால் வந்த வினை.. பிரபல நகைச்சுவை நடிகரின் காலை உடைத்த மனைவி

கள்ளக்காதலால் வந்த வினை.. பிரபல நகைச்சுவை நடிகரின் காலை உடைத்த மனைவி
  • PublishedJune 19, 2023

பிரபல தொலைக்காட்சி சேவையான அசத்தப் போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் வெங்கடேஷ்.

அண்மையில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக, பாஜகவினர் அவரை நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே வெங்கடேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில், அவருக்கும் அவரது மனைவி பானுமதிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது.

இதனையடுத்து பானுமதி பாஜகவிலுள்ள தனது உறவினரான வைரமுத்து என்பவரிடம், இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார்.

ஏற்கனவே சமூக வலைதளப்பதிவு விவகாரத்தில் வெங்கடேஷ் மீது ஆத்திரத்தில் இருந்த வைரமுத்து, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷின் கால்களை உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பானுமதி, அவரது கார் ஓட்டுனர் மோகன், வைரமுத்து மற்றும் பாஜகவை சேர்ந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *