தெலுங்கு ஹீரோ ஹன்சிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? வெடித்தது சர்ச்சை

தெலுங்கு ஹீரோ ஹன்சிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? வெடித்தது சர்ச்சை
  • PublishedMay 24, 2023

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பிரபல டோலிவுட் நடிகர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஆனால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாகவும் ஹன்சிகா கூறியதாக தெலுங்கு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

எனினும் இந்த சர்ச்சைக்குரிய செய்தியை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக மறுத்துள்ளார்.

இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், போலி செய்தி வெளியிட்டவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *