நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்த ஐந்து படங்கள்!

நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்த ஐந்து படங்கள்!
  • PublishedMay 24, 2023

தமிழில் அழுத்தமான பல கதாபாத்திரங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார் சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அப்படி அவர் வில்லியாக நடித்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

சண்டைக்கோழி 2: என் லிங்குசாமி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால்,  ராஜ்கிரண்,  கீர்த்தி சுரேஷ்,  வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  இதில் வரலட்சுமி பேச்சி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சத்யா: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு சத்யா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன்,  வரலட்சுமி சரத்குமார்,  மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஏசிபி அனுயா என்ற கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்தார்.

வீர சிம்ஹா ரெட்டி: கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் இந்த வருடம் பொங்கலை ஒட்டி வீர சிம்ஹா ரெட்டி தெலுங்கு திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பானுமதி என்ற கேரக்டரில் பிரதாப் ரெட்டியின் மனைவியாகவும்,  வீர சிம்ஹா ரெட்டியின் ஒன்றுவிட்ட சகோதரியாகவும் நடித்திருப்பார்.

கொன்றால் பாவம்: தயாள் பத்மநாபன் இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொன்றால் பாவம் திரைப்படம் வெளிவந்தது.  இப்படத்தில் நகைக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு இவரை நம்பி இவர் வீட்டில் தங்கும் சந்தோஷை கொலை செய்து எப்படியாவது அந்த நகையும் பணத்தையும் சுருட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.

சர்கார்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சர்கார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய்க்கு எதிர்மறையான கேரக்டரில் கோமளவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *